மத்திய வங்கியின் ஆளுநராக நாளையதினம் பொறுப்பேற்கிறார் அஜித் நிவாட் கப்பரல் !

Tuesday, September 14th, 2021

சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் நாட்டில் நல்ல அங்கீகாரம் இருப்பது சர்வதேசத்துடன் கடமையாற்றுவதற்கு உதவியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டபய ரரஜபக்ச எனக்கும் அவ்வாறான ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுப்பார் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

நாம் எமது வாழ்க்கையிலிருந்தும் ஒரு நாள் விடை பெற்றுச் செல்ல நேரிடும். எனவே இவ்வாறான பதவிகளின் நிலையான தன்மை குறித்து பேச வேண்டியதில்லை என்பதுடன் நாட்டின் நிதி நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழைப்பு விடுத்ததன் காரணமாக நான் இந்தப் பதவியை ஒருமனதாக ஏற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்துள்ள அவர் எதிர்க்கட்சிகள் இந்த நியமனத்தை அரசியல் ரீதியானது என கூறுவது நியாயமானதே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் இனி மத்திய வங்கியில் மாற்றங்கள் நிகழும் என அவர்களுக்குத் தெரியும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு இவ்வளவு காலம் தேவை என சரியாக கூற முடியாது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எதிர்வரும் 15 ஆம்திகதி முதல் அமுலாகும் வகையில் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, நாளையதினம் 15 ஆம் திகதி அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர், இதற்கு முன்னதாக அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன் சுமார் 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது, மத்திய வங்கியின் ஆளுநராகவுள்ள பேராசிரியர் W.D. லக்ஷ்மன் இன்றுடன் பதவி விலகவுள்ள நிலையில், நாளை புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: