மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவு!

Thursday, September 15th, 2016

மத்திய வங்கியின் அதிகாரிகளிடம்  திறைசேரி முறிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அதிகாரிகள் மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படமாட்டார்கள் என அந்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி முறிகள் தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி கோப் குழு கலந்துரையாடவுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிக்கை தயார் செய்யப்படுவதாகவும், விரைவில் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

New-Central-Bank-building-2

Related posts: