மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Tuesday, July 9th, 2019

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் கண்காணிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவற்றில் தடயவியல் கணக்காய்வு  மேற்கொள்வதற்கான பெறுகை செயற்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் மற்றும் கண்காணிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்கள் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்காக உலகலாவிய பரீட்சார்த்தம் மற்றும் சர்வதேச அனுபவத்துடனான நிறுவனததின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த பணிகளுக்காக முன்னின்ற கேள்வி விலைகளுக்கிடையிலான இடைவெளி பாரியதானதால் மீண்டும் விலைகளை கோருவது சிறந்ததாகுமென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலேசனைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டது.

இதற்கமைய இந்த தடயவியல் கணக்காய்வுக்கான செலவின் மதிப்பீட்டில் திருத்தத்தை மேற்கொண்டு உத்தேச பணிக்காக பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்காக மீண்டும் கேள்வி மனுவை கோருவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக் குழுவின் சேவையை இதற்காக பெற்றுக் கொள்வதற்குமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: