மத்திய கிழக்கிலிருந்து 71 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, November 8th, 2020

மத்திய கிழக்கில் மூன்று நாடுகளிலிருந்து 71 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி ஓமான், மஸ்கட்டிலிருந்து 19 இலங்கையர்கள் ஓமான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான WY-373 என்ற விமானத்தில் நேற்றிரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் 35 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஈ.கே -648 என்ற எமிரேட்ஸ் விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்தனர்.

தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ. ஆர் – 668 என்ற விமானத்தில் 17 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts: