மத்திய அரசாங்கத்தின் கீழ் வரவுள்ளது ஆதார வைத்தியசாலைகள் – அமைச்சர் ரஜித!

மாகாணசபைகளினால் நிர்வாகம் செய்யப்படும் ஆதார வைத்தியசாலைகளின் தொழிலாளர் பற்றாக்குறை, நிதிப் பிரச்சினைகள் உள்ளிட்வை காரணமாக ஆதார வைத்தியசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்துள்ளதால் ஆதார வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் சேர்க்கப்படும் கழிவுப் பொருட்களை முகாமைத்துவம் செய்வது குறித்த திட்டமொன்று கொழும்பு வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் உள்நாட்டு நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.
இதேவேளை, ஏனைய வைத்தியசாலைகளில் இந்த திட்டம் அவுஸ்ரேலிய நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீன வெளிவ...
|
|