மத்தியில் இணக்க அரசியல் செய்யும் நீங்கள் எதற்காக எதிர்க்கட்சி பதவியை பெற்றுக்கொண்டுள்ளீர்கள்? ஈ.பி.டி.பி கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் கேள்வி!

Tuesday, August 9th, 2016

தேர்தல் திணைக்களத்தினால் அதிகாரம் வழங்கப்படாத அரசியல் கட்சிகளின் வாழ்விற்காக அதிகாரம் உள்ள மக்கள் சேவைசெய்யும் கட்சிகளின் செயற்பாடுகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஒன்றையும், அதிகாரத்தில் இல்லாத போது ஒன்றையும்; பேசி மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை. மக்களுக்காக நாங்கள் எப்பொழுதும் ஒரே கோட்டிலேயே எமது செயற்பாடுகளை முன்னிறுத்தி செயலாற்றி வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்க மாகாண உறுப்பினர் தவநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண சபையின் 58ஆவது அமர்வின் போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்; தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறான விடயங்களை முன்னிறுத்தி தற்போது தமது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதானது வெட்கக்கேடான விடயமாக உள்ளது.

நாட்டின் மத்திய அரசாங்கத்தை உருவாக்கியது தாங்கள் தான் என கூறிக்கொண்டிருக்கும் நீங்கள் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், பிரதி அவைத் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டீர்கள்? தேர்தல் நேரத்தின்போது மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு கொள்கையை வகுத்துக்கொள்ளும் நீங்கள் மத்திய அரசின் ஒரு அங்கமாக இணைந்து பதவிகளை பெற்றுக்கொண்டபின் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து உங்களது சுயநல அரசியல் தேவைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றிர்கள். ஆனால் எமது கட்சி என்றும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயற்பட்டது கிடையாது.

1990ஆம் ஆண்டு காலத்தில் எம்மிடம் அரசியல் அதிகாரங்கள் இருந்திரக்கவில்லை. ஆனாலும் மக்களுக்கான சேவையை நாம் முன்னெடுத்திருந்தோம். அதன்பின் அரசியல் அதிகாரங்கள் கிpடைத்தது என்று மக்களை ஏமாற்றி எமத நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை இது அனைவரம் அறிந்தகொண்ட விடயம்.

பதவிகளுக்காக நாம் ஒருபோதும் சோரம் போனதும் கிடையாது.  அதற்காக எமது தலைமை மக்களை பணயம் வைத்ததும் கிடையாது. எமது கட்சிதான் கடந்த காலத்திலிருந்து இன்றுவரை சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமையை பொன்றவற்றை முன்னிறுத்தி இணக்க அரசியலை மத்தியுடன் ஏற்படுத்தி அவற்றை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளது. இதற்காக நாங்கள் எத்தனை தியாகங்களை செய்துள்ளோம்; இனியும் அதற்காக  செய்ய தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Related posts: