மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!

Monday, July 29th, 2019

நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதான வாகன சாரதிகளின் எண்ணிக்கை 6136 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 05ம் திகதி முதல் இன்று(29) வரையிலான விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(28) காலை 06 மணி முதல் இன்று(29) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 212 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.