மது போதையில் சாரதி – நீதிமன்றம் அதி உச்ச தண்டனை!

Thursday, July 11th, 2019

குடிபோதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட – ஹெட்டியாவத்தை பகுதியில் தனியார் பேருந்தை ஓட்டிய சாரதியே இவ்வாறு கைது செய்யப்பபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அவருக்கு 57,500 ரூபாய் அபராதமாக விதிப்பதற்கு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் குறித்த பணத்தை செலுத்த முடியாமையினால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019/10 போக்குவரத்து திருத்தத்தின் கீழ் மிகக்கூடிய அபராதம் இதுவென பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

42 வயதான குறித்த சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாகவும், பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் வாகனம் ஓட்டியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் காப்புறுதி சான்றிதழ் உட்பட காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஒலிம்பிக் சங்கத்துடன் வேலை செய்யும்படி கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்கள் கூறமுடியாது!
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் நிதியுதவி!
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
வேட்புமனுக்களை மீள் பரிசோதிக்கும் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
கடும் வறட்சி - மின்சார உற்பத்தி பாதிப்பு!