மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகளுக்கு 2 மாத கடூழியச் சிறை: ஒரு வருட சாரதியத்தடை!

மது போதையில் மோட்டார் வாகனங்களை செலுத்திய 4பேருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்று 2 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் தண்டமும் விதித்தது. அதே குற்றச்சாட்டுள்ள இருவரின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழக்கு முடியும்வரை இடை நிறுத்தப்பட்டது.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் மோட்டார் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் 6பேர் கைது செய்யப்பட்டு யாழ். நீதிவான் மன்றில் நேற்றும்,நேற்று முன்தினமும் முற்படுத்தப்பட்டனர். குற்றச்சாட்டை 4 இளைஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு 2மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒவ்வொருவரையும் 7ஆயிரத்து 500ரூபா தண்டம் செலுத்துமாறும், அவர்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டை மறுத்த இருவர் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட் பிணையிலும் 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழக்கு நடவடிக்கைகள் முடியும்வரை இடைநிறுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
Related posts:
|
|