மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை!

Saturday, October 1st, 2016

மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு கடந்த புதன்கிழமை(28) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இளைஞரிடமிருந்து மதுப் பரிசோதனையின் போது பெறப்பட்ட சுவாசப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த குற்றச் சாட்டை இளைஞர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றத்தினால் இரண்டு மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், சந்தேகநபரை 7500 ரூபா அபராதமாகச் செலுத்துமாறும், அவருடைய சாரதி அனுமதிப் பாத்திரத்தைத் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் அவர் மேலும் உத்தரவிட்டார்.

 courts-1-720x480

Related posts: