மதரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டம் – பிரதமர் !

Wednesday, June 26th, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இனக் கலவரத்தில் இரத்தம் சிந்தாமைக்கு நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. சிலர் பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள மதரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் ஊடாக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related posts: