மதத் தலங்களுக்கு அருகே இருக்கும் 6 மதுநிலையங்கள் இடமாற்றம் செய்யப் பரிந்துரை!

Wednesday, November 30th, 2016

யாழ்.மாவட்டத்தில் தற்போது இயங்கும் மதுபான நிலையங்களில், மதத்தலங்களுக்கு அண்மையில் இயங்கும் 6 மதுபான நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இடமாற்றம் செய்யப் பரிந்தரைத்துள்ளதாக, மதுவரித் திணைக்கள அத்தியகட்சர் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

யாழ்.மாவட்டத்தில் தற்போது 66 மதுபான நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 6 மதுபான நிலையங்கள், மத வழிபாட்டு தளங்களுக்கு அண்மையில் உள்ளன. இவற்றை இடமாற்றம் செய்யுமாறு நாம் நேரடியாகப் பரிந்துரைத்துள்ளோம். நாம் பரிந்துரைத்த 6 மதுபானச்சாலை உரிமையாளர்களின் 5 மதுபானச்சாலை உரிமையாளர்கள், இடமாற்றம் செய்வதற்க இணக்கம் தெரிவித்துள்ளனர். ஒரு மதுபானச் சாலையின் உரிமையாளர் மட்|டும் மறுப்புத் தெரிவித்து வருகின்றார். இதனால் அந்த மதுபான நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்ப்பு கிடைத்ததும் அது தொடர்பான நடவடிக்கை இடம்பெறும். ஏனைய 5 மதுபான சாலைகளும் அடுத்த ஆண்டில் இருந்து இடமாற்றம் செய்யப்படும். – என்றார்.

mathuvari-350x175

Related posts: