மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளை தடை செய்யுங்கள் – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்!
Monday, August 31st, 2020ஏப்’ரல் 21 தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மத அடிப்படையிலான அரசியல்கட்சிகளை தடைசெய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏப்’ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாப்பதற்கான எந்த முயற்சிக்கும் அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் மதம் மொழியை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இவ்வாறான அரசியல் கட்சிகள் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்றே சிந்திக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் மத தீவிரவாதம் பரவியுள்ளதன் காரணமாக நாங்கள் பல பிரிவுகளாக பிளவுபட்டு துயரில் சிக்கியுள்ளோம் எனவும் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்’ரல் 21 தாக்குதல்களின் குற்றவாளிகள் யார் அவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றனர் என பார்ப்பதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய விசாரணைகள் தங்கள் கடமைகளை சரிவரச்செய்ய தவறிய அதிகாரிகள் குறித்தே இடம்பெறுகின்றன நாங்கள் இந்த தாக்குதல்களுக்கு நிதி வழங்கி அதனை முன்னெடுத்தவர்கள் யார் என்பதை அறிய காத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏப்’ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு யார் முக்கிய குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|