மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது – கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!

Monday, August 12th, 2019

மதத்தை விடவும் மனித உயிர் மிகவும் பெறுமதியானது. ஆகையால் மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாதென கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமகால உலகிலுள்ள மனிதர்கள், உயிரை மதிக்காமல் நடந்துகொள்கின்றனர். கொலை செய்வதெல்லாம் சாதாரண விடயமாக ஒருசிலர் கருதுகின்றனர்.

ஆனால் கொலை செய்வதுதான் மிகப்பெரிய பாவமாகும். அவ்வாறு நடந்து கொள்பவர்களை கடவுளின் படைப்பு என்றே கூறமுடியாது” என கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.