மதகுவைத்தகுளம் காணியை பொருளாதார மையத்துக்கு கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, October 4th, 2016

வடக மாகாண பொருளாதார மையத்தை அமைப்பதற்காக மதகுவைத்தகுளம் பகுதியிலுள்ள நிலத்தைத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து விடுவிப்பதற்கான அமைச்சரவை அனுமதி வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் அமைப்பதற்கான இடத்தேர்வின் காரணமாக அதனை அமைக்கும் பணியே கேள்விக்குறியாக இருந்தது. இறுதியில் மதகுவைத்தகுளம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்தக் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால், அதன் ஒப்பந்தத்தை நீக்கம் செய்து வழங்கும் அனுமதி அமைச்சரவையிடம் கோரப்பட்டது.

அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியது. அந்த அனுமதி தொடர்பான அறிவிப்பு கடந்தவெள்ளிக்கிழமை மத்திய அரசால் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் பிரகாரம் பொருளாதார மையத்திற்கான அடிக்கல் நாட்டல் இந்த மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ftgh

Related posts: