மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 12th, 2018

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்று நள்ளிரவு முதல்  மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கிடையே சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.இதன்போது, 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 57 ரூபா விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபம், நீர்கொழும்பு, பேருவளை உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது


கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளார் நீஷா பிஷ்வால்!
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - இளஞ்செழியன்!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாருக்கெதிராக 400 புகார்கள்!
பெற்றோல் குண்டு வீச்சு: பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஏப்ரல் மாதம் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம்!