மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள்!

Saturday, June 9th, 2018

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காக முன்னர் இருந்த விலைக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீன்பிடித்துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 70 முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பான கலந்துரையாடலிலிருந்து தாம் விலகியிருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

Related posts: