மண்டைத்தீவில் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படும் – இலங்கை கிரிக்கட்டின் தலைவர்!

Friday, January 20th, 2017

திட்டமிட்டவாறு யாழ்ப்பாண வாவட்டத்தில் மண்டைத்தீவில் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படும். இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை  தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தலைவர் திலங்க சுமதிபால உரையாற்றினார். இதன்போது  சூரியவௌ போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட சர்வதேச மைதானங்களால் பலன் ஏதும் இல்லையென்றும்  இதே நிலைமை யாழ் சர்வதேச மைதானத்திற்கும் ஏற்படுமா என செய்தியானர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இலங்கை கிரிக்கட் சபை  தலைவர் திலங்க சுமதிபால இதற்கு பதிலளித்தார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கட் மைதானத்தை அமைக்கும் முயற்சிகளை கைவிடப் போவதில்லை

திட்டமிட்டவாறு மண்டைத்தீவில் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படும். சர்வதேச மைதானத்தை நிறுவுவதால் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்களும் பெரிதும் நன்மை பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

93e2f46177ca75392f180f3673488620_XL

Related posts: