மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
Monday, February 6th, 2017
மண்டைதீவு பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்கள் சென்று குறித்த பகுதி மக்களது நிலைமைகளை பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெடர்பாகவும் ஆராய்ந்தறிந்தகொண்டனர்.
இன்றையதினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தலைமையில் சென்ற குழுவினர் குறித்த பகுதி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டனர்.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த காலங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதேசத்தின் மக்களுடன் ஆராய்ந்தற்ந்துகொண்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போபோது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|