மண்டைதீவு கடற்பகுதியில் 6 மாணவர் உயிரிழப்பு: 5 மாணவர்கள் கைது!

Wednesday, August 30th, 2017

மண்டைதீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் .

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார்.

இந்நிலையில், நீந்தித் தப்பித்த மாணவன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். நண்பர்கள் இருவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கடலுக்குச் சென்ற இம் மாணவர்கள், இவ்வாறு உயிரிழந்தமை யாழ்ப்பாணத்தை சோக மயமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: