மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, June 18th, 2019

மண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் முன்னெடுக்கவேண்டும் என பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை வேலணை பிரதேச செயலகம் ஏற்றுக்கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

வேலணை பிரதேசத்தில் உள்ள இயற்கை வளத்தை பயன்படுத்தி அங்கு ஓர் சுற்றுலா மையத்தை அமைக்கவேண்டும் என பிரதேச சபையினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதற்கான அனுமதியும் பிரதேச செயலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்பிரகாரம் வேலணை பிரதேசத்தின் ஆளும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேசத்தின் நலன்கருதியும் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் தவிசாளர்; நடனசிகாமணி தெரிவித்துள்ளார்.

தீவக மக்களின் குறிப்பாக வேலணை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தவருகின்ற சுற்றுலா மையம் நிறுவுவது தொடர்பிலான அந்த பகுதி மக்களுடைய காத்திருப்புக்கு உரிய பலாபலன் கிடைத்துள்ளதாகவும் இதனூடாக அந்த பகுதி அபிவிருத்தியில் மேலோங்கும் அதேவேளை குறித்த பகுதிக்கான பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் எட்டப்பட்டுள்ளதாகவும் துறைசார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேசத்தின் நலன்கருதியும் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் தவிசாளர்; நடனசிகாமணி தெரிவித்துள்ளார்.