மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி – பல கடைகள் பாதிப்பு!

Friday, July 19th, 2019

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனை நகரில்  நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 10 கடைகள் அடங்கிய கட்டிடத் தொகுதி முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 60 வயதான கே.எம். ஜமால்டீன் என்ற நபரே சடலமாக இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

Related posts: