மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு

Tuesday, May 16th, 2017

அரநாயக்க உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

9177 குடும்பங்களை சேர்ந்த 33000 க்கும் மேற்பட்டோருக்கும் இவ்வாறு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நன்கொடையாளர்கள் மூலம் இருநூற்றி 37 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 387 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காணிகளை இழந்தவர்களுக்காக மேலும் 307 ஏக்கர் காணி வழங்கப்படுவதற்காக அடையாளாம் காணப்பட்டிருப்பதாகவும்; அமைச்சர் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்

Related posts: