மண்குழி நன்னீர் கிணற்றிலிருந்து கடற்படையினர் நீர் எடுக்கத்தடை!

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியிலுள்ள நன்னீர் கிணற்றிலிருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபை அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் நீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் எனக் கோரி பிரேரணையை முன்மொழியப்பட்டது.
குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மண்குழி பிரதேசத்தில் காணப்படும் நன்னீர் கிணற்றிலிருந்து கடற்படையினர் தமது தேவைக்காக தினமும் 10 ஆயிரம் லீற்றர் நன்னீரை நீர்த் தாங்கியில் எடுத்து செல்கின்றனர். அதனால் நிலத்தடி நீர் வற்றி நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. இதனால் மக்கள் பாவனைக்கு நீர் இல்லாமல் போகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதி மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு நன்னீரைப் பெற்றுக்கொள்ள பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே மக்கள் பயன்பாட்டிலுள்ள நன்னீர்க் கிணற்றிலிருந்து கடற்படை நீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என குறித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|