மண்கும்பான் பனைமர தோப்பில் பாரிய தீ : வேலணை பிரதேச சபை துரித நடவடிக்கை – அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன பனைமரங்கள்!

Wednesday, May 2nd, 2018

வேலணை – மண்கும்பான் பகுதியில் உள்ள பனை மரங்கள் நிறைந்த பகுதியில் திடீரென பற்றிக்கொண்ட தீ காரணமாக அதிகளவான பனைமரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

மண்கும்பான் பகுதியில் உள்ள பனைமர கூடல் நிறைந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிவதை வீதியால் சென்ற ஒருவர் கண்டள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் பிரதேச வேலணை பிரதேச செயலருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த சம்பவத்தை பிரதேசசெயலர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் யாழ் மாநகர தீயனைப்பு பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வேலணை பிரதேசசபை தவிசாளர் நமசிவாயம் கருருணாகரகுருமூர்த்தி, பிரதேச செயலர் மற்றும் பிரதேசசபை செயலாளர் ஆகியோர் சென்று மக்களுடன் இணைந்து தீயினை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த யாழ் மாநகரசபையின் தீயனைப்புப்படைப்பிரிவினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.  தீ ஏற்பட்டதற்கான காரணம் சதியா அவ்வது தவறுதலாக நடைபெற்ற சம்பவமா இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது.

Related posts: