மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Wednesday, May 9th, 2018

அரியாலை தென்கிழக்கு மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாதிருக்கும் வீதிகளது புனரமைப்பு தொடர்பாக அந்தப் பகுதி பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைய அப்பகுதிக்குச் சென்றிருந்த கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரன் தலைமையிலான குழுவினரிடமே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிகளை பார்வையிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக காலக்கிரமத்தில் நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் குறித்த பகுதியின் பங்குத்தந்தை, கட்சியின் குறித்த வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: