மணலேற்றி வந்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் சூடு?- இருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி – பருத்தித்துறை சாரையடியில் சம்பவம்!
Tuesday, January 10th, 2017ஹயஸ் வாகனமும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதியதில் ஹயஸ் வாகனத்தில் வந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை சாரையடி பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், காயமடைந்த மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிரந்த நிலையில் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரையடி பகுதியின் உள் வீதி வழியாக மணல் ஏற்றி வந்திருந்த கனரக வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்காக, டயரை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, யாழ்.- பருத்தித்துறை வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கனரக வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்தவர்களை மீட்ட பொலிஸார், பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதுடன், கனரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் ஏனையோர் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|