மட்டு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகின்றது – இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு!
Tuesday, June 27th, 2023மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய மீளாய்வுக்கூட்டம் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபர் கே.பத்மராஜாவின் ஒழுங்கமைப்பில் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டகக்ளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விவசாய துறைசார்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுசெய்யப்பட்டதுடன் அவை தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அறுவடை ஆரம்பமாகவுள்ளதனால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நெல் கொள்வனவு செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர்பாசன வசதிகளை பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் விவசாய அமைப்புகளின் கருத்துகளும்பெறப்பட்டு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|