மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம்: பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை!

Monday, June 24th, 2019

மட்டக்களப்பு – தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தினால் நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்திற்கு நிதி கிடைத்த விதம் மற்றும் அதன் நிர்மாணம் தொடர்பான பாரிய பிரச்சினை நிலவுவதாகவும் அது குறித்து சவுதி அரோபியா அரசாங்கத்தை இணைத்து கொண்டு ராஜதந்திர ரீதியிலான விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவசர கால சட்டத்தின் கீழ் குறித்த பல்கலைகழகத்தை முழுமையாக அரசாங்கத்திற்கு பொறுப்பேற்குமாறு அந்த மேற்பார்வை குழு பரிந்துரை செய்துள்ளது.

Related posts: