மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 72 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, July 6th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் நேற்று திங்கட்கிழமை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (6) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்

அதேவேளை நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில்; மட்டக்களப்பு சிறைக்கைதிகள் 72 பேருக்கும், பொலிசார் இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்றுபேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும்,

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 116 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: