மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன். இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்;கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

எனவே நாளாந்தம் கொரோனா தொற்றாளர் வீதம் அதிகரித்துச் செல்வதுடன் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பேணி நடப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ...
வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், முகங்கொடுக்க நேரிடுகின்றது – பாடசாலை...
நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரேமதாச நடத்திய வீட்டுத்திட்டங்க...