மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் விசேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, திருமலை வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர்கூட மண்டபத்தில் நேற்றைய தினம் (28) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்னம் (கி.பி) தலைமையில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான மாட்டின் ஜெயா, மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா (சிவா), யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்டோரும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சார்பில் சமூக ஆய்வு நிறுவனத்தின் சமூக ஆர்வலரான ஆரையம்பதியைச் சேர்ந்த கீர்த்தி, மாவட்ட மகளிர் அபிவிருத்தி அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அரசியல் உரிமைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
|
|