மடு வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு கோரிக்கை!

மடு பிரதான வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு அப்பகுதி மக்களும் மடு பகுதிக்கு யாத்திரை செய்யும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் குறித்த வீதியில் யானை உள்ளிட்ட பல காட்டு விலங்குகள் வந்து செல்வதால் பயணம் செய்பவர்கள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்வதாகதெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் மோதி பல காட்டு விலங்குகள் உயிரிழக்கின்றன என அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.
எனவே இது தொடர்பில் வெகு விரைவில் மாந்தை மேற்கு பிரதேச சபையினர் கவனத்திற்கொண்டு பயணம் செய்யும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைமேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்!
கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!
|
|