மசகு எண்ணெய் விலை சரிவு.

Saturday, April 2nd, 2016
மசகு எண்ணெய் ஒரு பீப்பா 4 சதவீதம் குறைந்து, 39 அமெரிக்க டாலர்களுக்கும் கீழ் சரிந்தது. இதன் காரணமாகவும், சர்வதேச பொருளாதார தேக்க நிலையை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
ஈரான் மற்றும் ஏனைய உற்பத்தி நாடுகள் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே, சவுதியும் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தும். இதனை சவுதி அரேபியாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விலை குறைவுக்கு காரணமாக உள்ளது. மசகு எண்ணெய் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1.48 அமெரிக்க டாலர் சரிந்து 38.85 டாலராக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மசகு எண்ணெய் விலை 6 சதவீதம் அதிகரித்தது. இது முதல் விலை உயர்வாக இருந்தது.
ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்ட பின்னர், ஒபெக் நாடுகளில், மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. சீனாவின் பிரச்சேசிங் மேலாளர் குறியீட்டு எணி அதிகரித்தது நிலையிலும் மசகுஎண்ணெய் விலை சரிந்தது.

Related posts: