மசகு எண்ணெய் விலை உயர்வு!

Friday, May 27th, 2016
கடந்த ஏழு மாதங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் மதிப்பை தாண்டியுள்ளது.

உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததற்கு, உலகில் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது, கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, நைஜீரியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீதான தீவிரவாத தாக்குதல்,மற்றும் அமெரிக்க பாறையிடுக்கு எண்ணெய் உற்பத்தி ஆகிய காரணங்களை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

அமெரிக்க அரசு எரிபொருள் கையிருப்பு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வருடத்தின் ஆரம்பத்தில் இருபத்து எட்டு டாலர் மதிப்பாக இருந்த கச்சா எண்ணெயின் விலை 80 சதவீதம் அதிகரித்ததற்கு  எண்ணெய் உற்பத்தி முடக்கம் தொடர்பாக ஓபெக் நாடுகள் மற்றும் ரஷியா இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தையும் ஒரு காரணமாக உள்ளது என  கூறப்படுகிறது.

Related posts: