மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை!

மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதலின் போதும் போலிப் பிரசாரங்கள் ஊடாக வன்முறைகள் தூண்டப்படுவதை தவிர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன.
ஆனால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதன் பின்னணியில் சில அரசியல் நோக்கங்களும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|