மக்கள் போராட்டம் என்ற போர்வையில் அரச கட்டடங்களை பலவந்தமாக ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

Thursday, July 21st, 2022

மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தற்போதைய நிலையில் மாற்று வழியில் பயணிக்கின்றது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய வேண்டும். அவர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.

அதனை விடுத்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவும், வீடுகளுக்கு தீ வைக்கவும் போராட்டம் எனும் போர்வையில் கலகம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.

அது ஜனநாயக போராட்டம் இல்லை. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: