மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!

Thursday, December 23rd, 2021

எதிர்வரும் மூன்று வாரங்களில், இலங்கையில் வேகமாக பரவும் கொவிட் திரிபாக ஒமைக்ரொன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் –

நேற்று (22) புதிதாக இனங்காணப்பட்ட 3 தொற்றாளர்கள் உட்பட இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது என சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதை தடுப்பதற்கு பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: