மக்கள் பயன் அடைவதற்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பது ஏன் – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி!

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பகிர்ந்து அளிப்பதற்காக மாத்திரம் அவசர கால சட்ட ஒழுங்கு விதிகள் வரையறுக்கப்பட்டு இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் –
இதன் இறுதி பயனை நாட்டின் அப்பாவி மக்கள் பெற்றுக் கொள்வார்கள். மக்கள் பயன் அடைவதற்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பது ஏன் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் தற்போதுள்ள தொற்று நிலைமையை தேசிய பிரச்சினையாக கருதி அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர உரையாற்றும் போது மக்களின் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் இந்த ஒழுங்கு விதிகளை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டினார். இதனை இராணுவ மயமாக்கலாக எடுத்துக் காட்டுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களின் வாழ்வதற்கான உரிமைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தற்போதைய எதிர்க்கட்சி எதிர்க்கின்றது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|