மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேசப் பிராந்திய ஆதரவு அமைப்புகள்

Monday, May 9th, 2016

தேசிய எழுச்சி மாநாட்டின் வெற்றிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேசப் பிராந்திய ஆதரவு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளதுடன், கட்சிக்கான தமது பங்களிப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.

நடைபெற்று முடிந்த தேசிய எழுச்சி மாநாடு தொடர்பிலான செய்திகளைத் தாம் அறிந்து கொண்டு கட்சிக்கான மக்களின் ஆதரவுகளை அறிய முடிந்துள்ளது.

இம்மாநாடு கட்சித் தலைமையின் கொள்கை மீதான உறுதிப்பாட்டையும், தோழர்களின் பற்றுறுதியையும், கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எழுச்சி மாநாடு உள்நாட்டில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது உறவுகளுக்கு மாநாட்டுப் பிரகடனம் ஊடாக புதிதான செய்தி ஒன்றைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதனடிப்படையில் மாநாட்டுப் பிரகடனம் எமது மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே யதார்த்த நிலையாகும்.

குறிப்பாக, புலம்பெயர் நாடுகளிலுள்ள கட்சியின் ஆதரவு அமைப்புகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, கட்சிக்கான எமது ஆதரவுப் பலத்தையும், ஒத்துழைப்புகளையும் ஒத்தாசைகளையும் தொடர்ச்சியாக நாம் வழங்குவோம் எனவும், அதனூடாக கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற சகல விதமான அரசியல் வேலைத்திட்டங்களுக்கும், மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களுக்கும் நாம் தொடர்ச்சியான பங்களிப்புகளை வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் கட்சியின் தோழர்கள், ஆதரவாளர்கள் ஒத்தாசைகளை வழங்க வேண்டுமென சர்வதேசப் பிராந்திய ஆதரவு அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

6

3

 2 1

10

Related posts: