மக்கள் நலன்களை முன்னிறுத்தியதான மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை: ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, December 7th, 2018

மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் அவை மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக அமையாது  தேவையற்ற நிதி மற்றும் இதர விரையங்களை ஏற்’படுத்தும் வகையில் காணப்படுமாயின் அதை நாம் ஏற்கப்போவதில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் உப்பினர் றெமீடியஸ் சுட்டிக்காட்டியுளார்.

யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்திற்கான விஷேட கூட்டத்தொடர் இன்றையதினம் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான கொளரவம் கொடுக்கப்படுவதில்லை என்பதுடன் முதல்வரது இணைப்பாளர்கள் என்று கூறுபவர்களால் உறுப்பினர்கள் பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. அத்துடன திட்டமிட்ட வகையில் அவர்கள் எம்மை அவமதிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் இச்சபையில் அதிகளவான செயற்பாடுகள் நிதிக்குழுவில் ஆராயப்படுவதில்லை என்பதுடன் கட்சி சார்பான தனிநபர் சுயதேவைகளாகவே காணப்படுகின்றது. இதனால் எமது குறிப்பாக கடைகளை வாடகைக்கு விடுவது மற்றும் மின் குமிழ் கொள்வனவு போன்ற விடயங்களே இந்த சபையின் பார்வைக்கு கொண்டுவரப்படவில்லை.இது மிகவும் தவறாகும்.

இவ்வாறாக பாதீடு முன்வைத்த முறைமை மற்றும் பல்வேறு தவறுகள் காணப்படுவதால் இப்பாதீட்டுக்கு மட்டுமல்லாது ஏனைய மக்கள் நலன் சாரா திட்டங்களுக்கும் எம்மால் ஒத்துவர முடியாததாகவே அமைகின்றது என்றார்.

Related posts: