மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிரவாக செயலளர் குற்றச்சாட்டு!

Thursday, January 21st, 2021

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைமையின் முறைகேடுகளால் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திகளும் வாழ்வாதாரமும் பாரியளவில் முடக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான ஐங்கரன் இராமநாதன்  இதனால் மக்கள் நலன்களை முன்நிறுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் மக்கள் சார் நலத்திட்டங்களும் தடைப்படுவதால் மக்கள் ஏமாற்றங்களுக்கும் உள்ளாக வருவதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிழவுகள் மற்றும் செயற்றிட்டங்களை வலி கிழக்கு பிரதேச மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தினதும் வாழும் மக்களினதும் தோவைப்பாடுகள் ஏராளம் உள்ளன. அவற்றை நாம் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் கடந்த காலங்களில் எமக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்திற்கேற்ப முடியுமானளவு சிறப்பாக செய்து கொடுத்திருக்கின்றம்.

அதே போல தற்போதும் இப்பிரதேச மக்களின் முக்கிய பொருளாதார வளமான விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பாதிப்புகளுக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளளோம். அத்துடன் அந்த விவசாய மக்கள் கோரியிருந்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான மானியங்களையும் நாம் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

குறிப்பாக வீட்டு திட்டம், இலவச மின்சார வழங்கல், மலசல கூடங்கள் வழங்கல், தொழில் வாய்ப்புகளை வழங்கல் உள்ளிட்ட பலவற்றை நாம் எமது அமைச்சரது முன்மொழிவுகள் மற்றும் நேரடி நியமனங்களூடாக முன்னெடுத்து வருவதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதையும் கண்காணித்து வருகின்றோம்.

அதே போல இவ்வாண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் புயலால் பாதிக்கப்பட்ட எமது பிரதேச விவசாபயிகளுக்கு இழப்பீடுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வறிய மக்களுக்கான சுய தொழில் வாய்ப்புகளுக்கான உதவிகளும் வீடுகளை புனரமைப்பத்கான நிதியுதவியும் இலவச மின்சார வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத்திலுள்ள எமது கட்சியின் உறுப்பினர்களது ஒதுக்கீடுகள் ஊடாகவும் இவ்வாண்டின் முதல் காலாண்டு பருவத்தில் 7 வீதிகளை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஆனால் அந்த வறிய விவசாய மக்களின் மானியங்களிலும் உதவித் திட்டங்களிலும் குழறுபடிகளையும் மோசடிகளையும் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் என்ற போர்வையில் அவரது கட்சி சார்ந்த தரப்பினர் மேற்கொள்ளும் அடாவடிகளால் உண்மையில் உதவிகளையும் மானியத்தையும் எதிர்பார்த்திருந்த மக்களும் விவசாயிகளும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவரது உறவினர்கள் அவரது ஆதரவாளர்கள் என அந்த மானியத்தை சூறையாடியதால் பல ஏழை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல வெங்காய செய்கை அழிவுக்கான இழப்பீடு வழங்கலில் பாரபட்சம் காட்டப்பட்டு கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு குறைவான இழப்பீடுகளும் குறித்த ஒருங்கிணைப்பு குழு இணை தலைமைசார் சிறிய விவசாயிகளுக்கு அதிகளவான இழப்பீடுகளும் வழங்கப்பட்ட கீழ்த்தரமான செயலும் அரங்கேறியுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த தரப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சினூடாகவும் ஏனைய மத்திய அமைச்சர்களூடாக அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவரும் திட்டங்களையும் மக்களுக்கான நலன்களையும் தான்தான் மேற்கொள்வதாக காட்ட முயலும் குறித்த தரப்பினரது அடாவடிகளால் பல திட்டங்கள் தற்போது இழுபறி நிலையில் உள்ளன.

அத்தகைய கீழ்த்தரமான அரசியல் தலையீடு தொடர்வதால் எமது பகுதியில் வீட்டுத்திட்டம் மின்சாரம் வழங்கல் ஓர் இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கல் உள்ளிட்டவற்றில் கல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதேபோல வீதி புனரமைப்புகளிலும் பாரிய மோசடிகளும் துஷ்பிரயோகங்களும் குறித்த ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் கடந்த மூன்று தசாப்தங்களாக யாழ் மாவட்ட மக்களின் தேவைப்பாடுகளையும் அபிவிருத்திகளையும் ஆயுத அடக்கு முறைகளுக்கு மத்தியில் முன்னெடுத்து வரும் எமக்கு இவ்வாறான அற்ப தரப்பினரது இடையூறுகள் சாதாரணமானவையே என்றாலும் அரச அதிகாரிகள் தமது சேவையின் தன்மையை உணராது ஒருதரப்பினரது பக்கம் செயற்படுவதால் அரச திட்டமங்களை முன்னெடுப்பதில் பல சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: