மக்கள் சேவைத்திட்டம் பயனுள்ளதாக அமையும் – யாழ் மாவட்ட செயலர்!

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரச தலைவரின் மக்கள் சேவை செயற்றிட்டம் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்தார்.
அரச தலைவரின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையே யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
அரச தலைவர் தலைமை அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே.
உத்தியோகத்தர்கள் மக்களிடம் நேரில் சென்று அறிந்து தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த திட்டம் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.
Related posts:
|
|