மக்கள் சேவைகள் தாமதமாகக் கூடாது – ஜனாதிபதி!

Monday, January 8th, 2018

நடைபெறவுள்ள தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்க நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் நாளாந்த மக்கள் சேவைகள் எந்த வகையிலும் தாமதமாகக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அரச நிறுவனத்திடமும் உள்ள சொத்துக்கள் அல்லது வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்த இடமளிக்காதிருப்பது அமைச்சுக்களின் செயலாளர்களினது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிய வருடத்தின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திட்டங்களை வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த வருடம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டிருக்குமானால் அது குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் கூறியுள்ளன.

Related posts: