மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று அனுபவிக்கிறது – சுகாதார அமைச்சு!

Friday, April 23rd, 2021

புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று செலுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை கொரோனா தொற்று காரணமாக மிக ஆபத்தான நிலையில் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் எஸ்.எம். அர்னேல்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே தின நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts:

3 இலட்சம் பேர் விண்ணபம் - பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா...
தமிழகத்தின் நிவாரணக் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் - இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்ப...

வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைம...
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பத...