மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம் – புத்தசாசன அமைச்சு!

Monday, April 29th, 2019

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் , வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள், அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் இணக்கப்பாட்டுக்கு அமைய இன்று(29) குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம், சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts: