மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, August 26th, 2020

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு, மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் புதியஉறுப்பினர்களுகான திசைமுகப்படுத்தல் செயலமர்வு நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

பொதுத் தேர்தலின் மூலம் பல வருடகாலங்களுக்கு பின்னர் பரிபூரணமான நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் அனைவரும் கடந்த 5 மாதங்களாக பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தே உறுப்பினராக தெரிவாகி வந்திருக்கின்றனர்.

அதனால் புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் தொடர்பாக சிறந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

அத்துடன் நாட்டில் இதுவரை காலமும் தீர்த்துகொள்ள முடியாத பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மக்கள் பாரிய வெற்றியை எமக்கு தந்திருக்கின்றனர். விசேடமாக அரசியலமைப்பில் பல முரண்பாடுகளை கடந்த காலங்களில் எமக்கு காணமுடிந்தன. அவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளவேண்டி இருக்கின்றன. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படாதவகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதனால் மக்கள் அதிகளவு எதிர்பார்ப்புடனே எங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு கொஞ்மேனும் பாதிப்தை ஏற்படுத்தாதவகையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.

அன்றாட நடவடிக்கைகளைப்போல் எதிர்கால நடவடிக்கைகளின்போதும் எம்மால் தவறுகள் எதுவும் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காகவே புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான கருத்தரங்களை நடத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படை தெளிவூட்டல்களை மேற்கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: