மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட அதிகளவானோர் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியேறும் தரப்பினருக்காக 11 இடங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒருவகை கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|