மக்கள் அசண்டையீனம் – மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

மக்களின் அசண்டையீனமான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் இவ்வாறான கவனயீனமான நடவடிக்கையால் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால், கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில்
மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய எல்லைப் பகுதிகளில் திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது.
000
Related posts:
|
|