மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Friday, May 21st, 2021

நாட்டில் கொரோனா பாதிப்பும், மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அவ்வாறு செய்தால் வைரஸ் பரவலை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று கொவிட் கட்டுப்பட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

திரிபடைந்த கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றில் 3500 தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மாத்திரமின்றி ,

இதே போன்று 3 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். பாதிப்புக்கள் அதிகமுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. சமூகத்திலுள்ள தொற்றாளர்களால் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடையக் கூடும்

எனவே மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுவதோடு , அநாவசிய காரணிகளுக்காக வெளியில் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts: